Posts

Showing posts from May, 2014

நிலை தடுமாற்றம்..!

சரியெது  பிழையெது சரியாகத் தெரியவில்லை அவை அறியாததால் புது சலனங்கள் நேற்று சரியாகப்பட்டது இன்று தவறாகப்படுகிறது நேற்று தவறாகப்பட்டது இன்று சரியாக தென்படுகிறது நாளை நிலைக்க போவது என்னவோ? இரவோடு தினமும் இரைச்சல்கள், எத்தனை எண்ணங்கள் நிதமும் வந்து மோதுகின்றன சிந்தை சிதறுகிறது தெளிவோ தெறித்து ஓடுகிறது ஆத்மாவோ விசனிக்கிறது, அது தெளிவான நிலையொன்றை தேடியலைகிறது சருகென உலருது நெஞ்சம் அதில் கருகிடும் துகள்களாய் தளும்புகள் கொஞ்சம், விந்தையாக இருக்கிறது வியப்போ மேலிடுகிறது, எந்தவித காரண்மின்றி என்னையே நொந்து கொள்கிறேன்  எதற்கோ பயப்படுகிறேன் என்னவாயிருக்கும்? எதையாவது இழந்தேனா? இல்லை துயரத்தில் துவண்டு விழுந்தேனா? குறுகிய எல்லைக்குள் இருந்துவிட்டேனா? இல்லை பெருகிய ஆசைகளுக்கு இடமளித்தேனா? இச்சைகளுக்கு இசைந்தேனா? இல்லை எதையாவது துச்சமென மிதித்தேனா? குத்திடும் முட்களாய் குழப்பங்கள் அவை கிழித்து வரும் செங்குருதியாய் விசும்பல்கள்....!

வாழும் தெய்வம்....!

இருட்டான ஒரு கோவில் நான் வாழ்ந்தேன் பத்து மாசம் உயிர் தந்து உடல் தந்தாள் என் தேவதை ........ மலர் கூட காம்பிற்கு கடனாளி தான் இங்கு அதைப் போல என் தாய்க்கு கடன்காரன் நான் உலகெங்கும் பல கோவில் பல தெய்வம் இருந்தாலும் என் ஒரு கோவில் ஒரு தெய்வம் நீ தான் அம்மா........ விழி ரெண்டும் நனைக்காமல் உன் புகழ் சொல்ல முடியாது விழி ரெண்டில் வழிகின்ற நீர் சொல்லட்டும்........

அன்னையர் தின வாழ்த்துகள்!!!

Image
தாயே அன்று உந்தன் மடியில் மறந்து போன என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக்கொல்கிறது எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால் * இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு * என் மேலான உந்தன் கவனத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான் * எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை உன் எல்லா குழந்தைக்கும் ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே * என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன் நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை * உன்னில் தடுக்கி விழுந்தபோதும் உன் பக்தனாய் அம்மா என உன்னையே அழைத்தபடி விழுந்திருக்கிறேன் நான் * நான் பார்த்திருக்கிறேன் உன் கண் வலிக்காக அழாமல் என் மேல் விழுந்த தூசிக்காய் நீ கண்ணீர் சிந்தியதை * அன்று நிலாவைக் காட்டி நீ சோறு ஊட்டையில் அருமை அறியாமல் உன் கையை தட்டி விட்டிருக்கிறேன் இன்று நிலாவும் இருக்கிறது சோறும் இருக்கிறது தூரத்தில் உன் கை அம்மா ரொம்பப் பசிக்கிது ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன் உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன் * அம்மா உனக்கு அவ்வளவு

மழை இல்லை.

Image
மரங்கள் இல்லை என்பதால் மனமிரங்க  மறுக்கின்றன முகில்கள்......... காதலிக்க யாருமில்லையாம் ......  

களை!

Image
கரும்புத் தோட்டத்தில் நெல்லே முளைத்தாலும் களை என்றுதான் நிலைக்கும் கமக்காரன் மனது ....