வெளிநாட்டு வாழ்க்கை!







  



வளமான நாட்டில்
வழமற்ற வாழ்க்கை
சொல்வாக்கு செல்லாக்காசாகி
செல்வாக்கில் செழிக்கிறது வாழ்க்கை...!
வாங்கிய கடனுடன்
கனவுகள் சுமந்து
விடியலைத்தேடி
விழிகளில் நீருடன்
கடல் கடந்து கால் பதிக்கிறோம்
அயல் நாட்டில்..!
புரியாத மொழி
பழகாத மனிதர்கள்
தெரிந்த முகங்களுக்கான தேடல் - கண்களில்
புரிந்த பாசைக்கான  ஏக்கம்- காதுகளில்
கண்களில் தூக்கம் இல்லை
ஏக்கமுண்டு
மனதில் மயக்கம் இல்லை
தயக்கமுண்டு 
பல தேச பரதேசிகளின்
சங்கமத்தில் விலகுகிறது
ஏக்கமும் தயக்கமும்...!
காலங்கள் செல்ல செல்ல
காசேதான் எல்லாம் என்ற நிலை
சுருங்கிய உலகில்
சுதாரித்துகொள்கிறது மனிதம் !
அம்மாவின் அன்பு
அப்பாவின் அரவணைப்பு
கட்டிய மனைவின் காதல்
பெற்ற பிள்ளையின் பாசம்
இனிய உறவுகள்
பழகிய மனிதர்கள்
இவைகளுக்கு எட்டாத தூரத்தில் நாம்!
வாழ்க்கைக்காக வேலை அன்று
வேலைக்காக வாழ்க்கை இன்று
இதுதான் இயந்திர வழக்கையோ..!
காலத்தின் காலடியில்
கால்ப்பந்தாகவும்
காற்றில் அசையும்
காகிதமாகவும்
அல்லாடுகிறது
அயல் நாட்டு வாழ்க்கை..!
மெழுகுதிரி வாழ்க்கை
உருகுவது நீயாக இருந்தாலும்
ஒளி உனக்கான உறவுகளுக்கே..!

Comments

Popular posts from this blog

அம்மா உனக்கு....

வணக்கம்

வெளிநாடு...!